தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

புதிய சாலை தேவை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் புத்தூர் ஊராட்சியில் நடுத்தெருவில் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

காளிராஜ், புத்தூர்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தினமும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதிக்கு விருதுநகரில் இருந்து மதிய வேளைகளில் குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் காத்திருந்து பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

சாலையில் தேங்கும் குப்பைகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் சாலையோரங்களில் சிலர் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் காற்றில் பறக்கும் குப்பைகள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் மீது விழுந்து அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே சாலையின் ஓரத்தில் குப்பைகள் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகுமார், சிவகாசி.

கொசு தொல்லை

விருதுநகர் கொல்லர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சமீபகாலமாக கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் கொசுக்கடியால் சரிவர தூக்கமின்றி அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயச்சந்திரன், விருதுநகர்.

புதிய நூலக கட்டிடம் வேண்டும்

விருதுநகர் மாவட்டம் மேலராஜகுலராமன் ஊராட்சி எஸ்.திருவேங்கிடபுரம் பகுதியில் உள்ள நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் புத்தகங்களை அடுக்கி வைக்க போதிய இடவசதி இல்லை. மேலும் வாசகர்கள் அமர்ந்து படிக்கவும் போதிய இடவசதி இல்லை. எனவே நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குருசாமி, மேலராஜகுலராமன்.


Next Story