தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயணிகள் அவதி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் போதிய அளவு குடிநீர் வசதி இல்லை. மேலும் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், ராஜபாளையம்.
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் பனையடிப்பட்டி ஊராட்சி கண்டியாபுரம் கிராமத்தில் இருந்து அன்பின் நகரத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வராஜ், பனையடிப்பட்டி.
தெருவிளக்கு வேண்டும்
விருதுநகர் மாவட்டம் சுந்தரநாச்சியார்புரம் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இப்பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியினர் வெளியே செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேச்சியப்பன், இந்திராநகர்.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யூனியன் நாகம்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதை சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பிரபா, நாகம்பட்டி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
விருதுநகர் அருகே அருப்புக்கோட்டை யூனியன் குல்லூர்சந்தை கிராமம் பழைய காலனியில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்யபிரபா, குல்லூர்சந்தை.