தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து திருமங்கலம் செல்வதற்கு இரவு நேரங்களில் குறைந்த அளவு பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் இரவு நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இரவு நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகவேல், திருமங்கலம்.

நடவடிக்கை தேவை

மதுரை மாவட்டம் கொண்டுரெட்டிபட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதையில் முட்செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண், மதுரை.

விபத்து அபாயம்

மதுரை மேலூர் ரோட்டில் ஒத்தக்கடையில் இருந்து மாட்டுத்தாவணிக்கு வரும் மெயின் ரோடு மற்றும் மாட்டுத்தாவணியில் இருந்து பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் ,கே.கே. நகர், அண்ணா நகர் வழியாக செல்லும் மெயின் ரோட்டில் கால்நடைகள் அதிகம் சுற்றித்திரிகின்றன. இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், மதுரை.

சுகாதார சீர்கேடு

மதுரை மாநகர் தவிட்டு சந்தை பந்தடி 8-வது தெரு பகுதியில் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கண்ணன், மதுரை.

குண்டும், குழியுமான சாலை

மதுரை மாநகர் யாகப்பா நகர், பாண்டியன் நகர் போன்ற பகுதி சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, இந்த சாலைகளை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், மதுரை.


Next Story