தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

நோய் பரவும் அபாயம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிகளில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

சேதமடைந்த சாலை

விருதுநகரில் தந்தி மர தெரு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. ஆதலால் வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் இவ்வழியே செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயச்சந்திரன், விருதுநகர்.

பெயர்பலகை வேண்டும்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் பழைய நகராட்சி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் பெயர் பலகை இல்லாததால் பொதுமக்கள் குழப்பமடைகின்றனர். எனவே பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

குமார், சாத்தூர்.

பூங்கா அமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா வசதி இல்லை. எனவே பொதுமக்கள் நலனை கருதி இப்பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், செட்டியார்பட்டி.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் முகவூர் - சேத்தூர் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரியப்பன், முகவூா்.


Next Story