தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

எரியாத தெருவிளக்கு

மதுரை மாடகுளம் பகுதியில் மயானம் அருகில் உள்ள தெருவில் தெருவிளக்குகள் இரவு நேரத்தில் எரியவில்லை. இதனால் அவ்வழியே இரவு நேரங்களில் செல்லும் மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். குறிப்பாக பெண்களும், சிறுவர், சிறுமிகளும் பயப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் புதிய மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

புதிய ரேஷன்கடை தேவை

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் சுந்தரராஜபுரத்தில் இயங்கி வந்த ரேஷன் கடை பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. மேலும் பொதுமக்கள் வெயிலில் நின்று பொருட்களை வாங்கும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், சுந்தரராஜபுரம்.

சாலையில் சுற்றும் கால்நடைகள்

மதுரை மாநகர் மாட்டுத்தாவணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சாலைகளில் கால்நடைகள் ஆங்காங்கே சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சிவகுமார், மதுரை.

தெருநாய்கள் தொல்லை

மதுரை யாகப்பாநகர், தாசில்தார்நகர், வண்டியூர் ஆகிய பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்துவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகளுக்கு நாய்களால் இடையூறுகள் ஏற்படுகிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமு, மதுரை.

கூடுதல் பஸ் தேவை

மதுரை மாவட்டம் சிலைமான் அருகில் சக்கிமங்கலம், இளமனூர், வெற்றிலைப்பேட்டை, தெப்பக்குளம், மதகுஅணை உள்ளிட்ட பகுதிகளில் டவுன் பஸ்களின் இயக்கம் குறிப்பிட்ட அளவே உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் கால விரயம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகின்றது. எனவே கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகேசன், மதுரை.


Next Story