தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

ஆக்கிரமிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நேதாஜி ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடைக்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

ெபாதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை செல்லும் சாலையில் உள்ள தார் பெயர்ந்து மண் சாலையாக காணப்படுகிறது. இதனால் பஸ்கள் செல்லும் பொழுது புழுதி பறக்கிறது. அந்தப் புழுதியினால் கடைகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைவதோடு பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே தார் ஊற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.

ஸ்ரீராம், சாத்தூர்.

கூடுதல் பஸ்வசதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வத்திராயிருப்பு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வத்திராயிருப்பு.

இடையூறாக மின்கம்பம்

விருதுநகர் அகமதுநகர் பள்ளிவாசலுக்கு எதிரே உள்ள முக்கிய தெருவின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்வோர் அவதிப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள மின்வயர்களில் மரக்கிளைகள் உரசியபடி உள்ளது. இதனால் மின்தடை ஏற்பட வாய்புள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரத்ராஜா, விருதுநகர்.

சாலை அகலப்படுத்தப்படுமா?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எட்டூர்வட்டம், குமாரலிங்காபுரம் ஆகிய ஊர்களுக்கிடையே தேசிய ஜவுளிப்பூங்கா அமைகிறது. நாடுமுழுவதும் தளவாடச் சாமான்கள் ஏற்றுமதி, இறக்குமதி வாகனங்கள் மூலம் நடைபெற உள்ளது. ஆகவே வாகனங்கள் நெருக்கடி இல்லாமல் கடந்து செல்ல வசதியாக நெடுஞ்சாலையின் இருபுறமும் அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தரமூர்த்தி, குமாரலிங்காபுரம்.


Next Story