தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாகன ஓட்டிகள் அவதி
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தை ஒட்டி மரம் வளர்ந்துள்ளது. இந்த மரத்தின் கிளைகள் காற்றடிக்கும் போது பாலத்தின் மீது படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பாலத்தின் மீது படும்படி வளர்ந்துள்ள மரக்கிளையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகேஷ், மதுரை.
சாலையில் செல்லும் கழிவுநீர்
மதுரை மாநகர் வைகை தென்கரை சாலையில் ஆங்காங்கே சில இடங்களில் கழிவுநீர் செல்கிறது. வாகனங்கள் அவ்வழியே செல்லும்போது நடந்து செல்பவர்கள் மீது கழிவுநீர் படுகிறது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேஷ், மதுரை.
செடிகள் அகற்றப்படுமா?
மதுரை யானைக்கல் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் பாலம் வலுவிழந்து வருகிறது. எனவே இந்த செடிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரன், மதுரை.
அச்சுறுத்தும் தெருநாய்கள்
மதுரை எஸ்.எஸ். காலனி எஸ்.டி.சி. மெயின் ரோடு, பழைய போலீஸ் ஸ்டேஷன் ரோடு ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் நாய்கள் வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதிர்வேல், எஸ்.எஸ்.காலனி.
சுகாதார சீர்கேடு
மதுரை மாநகர் மூன்றுமாவடி ராமலட்சுமி நகர் மெயின் ரோடு பகுதியில் பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தோணி, மூன்றுமாவடி.