தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

நாய்கள் ெதால்லை

விருதுநகர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் பலர் நாய் கடியால் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.

சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா இந்திராநகரிலிருந்து சீனிவாசகப்பேரி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணகுமார், சீனிவாசகப்பேரி.

பயணிகள் அவதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து சிவகாசிக்கு செல்லும் வழித்தடத்தில் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் பயணிகள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சாத்தூர்.

வாருகால் வசதி வேண்டும்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா எஸ்.இராமச்சந்திரபுரத்தில் கலைமகள் தெற்கு, மேற்கு தெருக்களில் முறையான வாருகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீரை வெளியேற்ற வழியின்றி இந்த பகுதியில் உள்ள மக்கள் தவிக்கின்றனர். எனவே இந்த பகுதியில் வாருகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், எஸ்.ராமச்சந்திரபுரம்.

ஆபத்தான பள்ளம்தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில்வே பீடர் ரோட்டிற்கு செல்லும் தார் சாலையானது முற்றிலும் தார் பெயர்ந்த நிலையில் பெரிய அளவிலான பள்ளங்களுடன் உள்ளது. இதனால் இந்த சாலையில் நடப்பதற்கும் வாகனங்களில் பயணிப்பதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆபத்தான பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பாா்களா?

ஸ்ரீராம், சாத்தூர்.


Next Story