தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை


சாலையில் செல்லும் கழிவுநீர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் தேவசேரியில் உள்ள தெருவில் கழிவுநீர் கால்வாய் உடைந்து சாலையில் கழிவுநீர் செல்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தேவசேரி.

உடைந்த குடிநீர் குழாய்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து தெருக்களுக்கு செல்லும் குடிநீர் குழாய் மூன்று இடங்களில் உடைபட்டு நீர் பெரும்பாலும் வீணாக செல்கிறது. இதனால் தெருக்குழாயில் போதிய குடிநீர் வருவதில்லை. எனவே இந்த பகுதியில் உடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்லாண்டி, டி.மீனாட்சிபுரம்.

சாலை வசதி வேண்டும்

மதுரை கோச்சடை அம்பலக்காரர் தெருவில் சாலை குண்டும் குழியுமாக உள்ளன. மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜன், கோச்சடை.

பொதுமக்கள் சிரமம்

மதுரை அண்ணா பஸ் நிலையத்தின் உட்புறம் பஸ் வந்து செல்லுமிடத்தில் நிழற்குடை இல்லாததால் வயதானவர்கள், பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புமணி, மதுரை.

பயணிகள் நிழற்குடை வேண்டும்

மதுரை தவிட்டு சந்தையில் இருந்து பெரியார் பஸ் நிலையம் செல்லும் வழித்தடத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் வெயிலில் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், மதுரை.



Next Story