தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பொதுமக்கள் அச்சம்
விருதுநகர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், விருதுநகர்.
வாருகால் வசதி வேண்டும்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா எஸ். இராமச்சந்திரபுரத்தில் கலைமகள் தெற்கு, மேற்கு தெருக்களில் வாருகால் வசதி இல்லாததால் கழிவுநீரை வெளியேற்ற வழியின்றி மக்கள் தவிக்கின்றனர். எனவே இந்த பகுதியில் வாருகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வத்திராயிருப்பு.
ஒளிராத தெருவிளக்கு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகருக்குள் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சாலை பிரிவில் உள்ள மின் விளக்குகளில் சில சரிவர எரியாததால் அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும்.
ஸ்ரீராம், சாத்தூர்.
சுகாதார சீர்கேடு
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி பள்ளி வாசல் தெருவில் வாருகால் சுத்தம் செய்யாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள வாருகாலை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிமுத்து, தம்பிபட்டி.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் வழியில் மல்லியை அடுத்த மெயின் ரோட்டில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது மாயதேவன்பட்டி. இந்த கிராமத்திற்கு செல்லும் சாலைகள் சேதமடைந்து மிகவும் மோசமாக உள்ளது. இந்த சேதமடைந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம், ஸ்ரீவில்லிபுத்தூர்.