தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

போக்குவரத்து நெரிசல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் சிலர் ஆங்காங்கே வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துக்கிருஷ்ணன், சிவகாசி.

சேதமடைந்த சாலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் சாலையில் சில இடங்கள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகளை மிகவும் சிரமப்படுத்துகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துக்குமார், ராஜபாளையம்.

சுகாதார சீர்கேடு

விருதுநகர் மாவட்டம் ஜமீன் கொல்லங்கொண்டான் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், ஜமீன் கொல்லங்கொண்டான்.

வாருகால் வசதி வேண்டும்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா எஸ்.ராமச்சந்திரபுரத்தில் கலைமகள் தெற்கு, மேற்கு தெருக்களில் வாருகால் வசதி இல்லாததால் கழிவுநீா் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. எனவே இப்பகுதியில் முறையான வாருகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், எஸ்.ராமச்சந்திரபுரம்.

பொதுமக்கள் அச்சம்

விருதுநகர் மாவட்டம் கிழவிகுளம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வழியாக வேலைக்கு செல்லும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இந்த நாய்கள் கோழி மற்றும் ஆடுகளையும் கடிக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கிழவிகுளம்.


Next Story