தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

போக்குவரத்து நெரிசல்

மதுரை மாநகர் மாட்டுத்தாவணி மற்றும் மெயின் ரோடுகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிகண்டன், மதுரை.

குண்டும், குழியுமான சாலை

மதுரை மாநகா் காமராஜர் சாலை பிசர்ரோட்டிலிருந்து புதுராம்நாட்ரோடு செல்லும் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மோகன், மதுரை.

சாலை அமைக்கப்படுமா?

மதுரை அவனியாபுரம் அருகே பராசக்தி நகர் முழுவதும் சாலை வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சாலை வசதி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், மதுரை.

சுகாதார சீர்கேடு

மதுரை மாநகர் 70-வது வார்டு துரைசாமி நகர் பிரித்தம் தெரு பகுதியில் கழிவுநீரானது சாலையில் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பாலாஜி, மதுரை.

அச்சுறுத்தும் நாய்கள்

மதுரை மேல அனுப்பானடி முத்துமாரியம்மன் கோவில் ஊருணி கரை ரோட்டில் அதிகமான நாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், வாகனங்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் அவ்வழியில் செல்வதற்கே வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாண்டி, மதுரை.


Next Story