தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகாசி.

ேபாக்குவரத்து நெரிசல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் மற்றும் வடக்கு தெற்கு ரத வீதிகளில் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீராம், சாத்தூர்.

பெயர் பலகை வேண்டும்

விருதுநகர் நகராட்சி அலுவலகம் பின் பகுதியில் உள்ள கட்டிடத்தில் சித்த மருத்துவமனை செயல்படுகிறது. ஆனால் பெயர் பலகையில் மகப்பேறு மருத்துவமனை என உள்ளதால் நோயாளிகள் பலர் வந்து திரும்பி செல்கின்றனர். எனவே அங்கு சித்த மருத்துவமனை என பெயர் பலகை வைக்க வேண்டும்.

பரத்ராஜா, விருதுநகர்.

ஆக்கிரமிப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டி அணைக்கட்டு முழுவதையும் கருவேல மரங்கள் அதிகமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் அணையில் தண்ணீர் சேமிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சாத்தூர்.

நோய் பரவும் அபாயம்

விருதுநகர் மாவட்டம் கூத்திப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதுடன் தேங்கிய மழைநீரில் இருந்து கொசுக்கள் உருவாகி நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?

பாண்டியராஜ், கூத்திப்பாறை.


Next Story