தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்து அபாயம்
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் உள்ள துணை சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடத்தின் மேல் தளம் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் விபத்து அபாயம் உள்ளது. எனவே இந்த துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காந்திபாஸ்கரன், பரவை, மதுரை.
எரியாத தெருவிளக்கு
மதுரை மாநகராட்சி 9-வது வார்டு, ரமணா அவென்யூ, டி.எம். நகர் 8-வது குறுக்குத் தெரு பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலையில் பயணிக்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற அசம்பாவிதங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அர்ச்சுனராஜன், மதுரை.
ஆபத்தான பள்ளம்
மதுரை மாநகராட்சி 32-வது வார்டு பி.டி. ராஜன் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் சிலர் சறுக்கி விழும் நிலை உள்ளது. எனவே ஆபத்தான இந்த பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெற்றி, மதுரை.
குண்டும், குழியுமான சாலை
மதுரை மாவட்டம் புது விளாங்குடி செம்பருத்தி நகரில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்துவோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
அச்சுறுத்தும் நாய்கள்
மதுரை மாநகர் பெரியார் பஸ் நிலைய பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதனால் பயணிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.