தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத தெருவிளக்குகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணி, சிவகாசி.
நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சரக்கு வாகனங்களில் விதிமுறைகளை மீறி ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமாரவேல், அருப்புக்கோட்டை.
பொதுமக்கள் அச்சம்
விருதுநகர் நகர் பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துவதுடன் வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. மேலும் நாய்க்கடியால் நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், விருதுநகர்.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் சோரம்பட்டி கிராமத்தில் இருந்து வடமலாபுரம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்தது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வடமலாபுரம்.
வாகன ஓட்டிகள் அவதி
விருதுநகரிலிருந்து பேராலி செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
திவ்யபார்வதி, பேராலி.