தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

விபத்து அபாயம்

விருதுநகரில் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ரெயில்வே பீடர் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகுமார், விருதுநகர்.

சுகாதார சீர்கேடு

விருதுநகர் யூனியன் கூரைக்குண்டு பஞ்சாயத்தில் ஆர்.எஸ்.நகர் பகுதியில் முறையான வாருகால் அமைக்கப்படாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திக், கூரைக்குண்டு.

பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் இருந்து பாலவனத்தம் செல்லும் பாதையில் உள்ள ரெயில்வே பாலத்தில் மழைக்காலங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகேஷ், கோபாலபுரம்.

சேதமடைந்த மின்கம்பம்

விருதுநகர் வட்டம் செந்நெல்குடி கிராமத்திற்கும் பொட்டல்பட்டி கிராமத்திற்கும் இடையே விவசாயக் கிணறுகளுக்கு செல்லும் மின்பாதையில் உள்ள ஒரு மின்கம்பம் உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், செந்நெல்குடி.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 12-வது வார்டு திருத்தங்கல் பாண்டியன்நகர் பகுதியில் சில மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த சேதமடைந்த மின் கம்பங்களால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மின்கம்பங்களை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருத்தங்கல்.


Next Story