தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆக்கிரமிப்பு
மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் 1-வது மெயின் ரோடு முதல் 4-வது மெயின் ரோடு வரை மற்றும் எம்.கே.புரம் மெயின் ரோடு சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. இதனால் இந்த சாலைகளில் செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்கயர்கண்ணி, மதுரை.
குரங்குகள் தொல்லை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் கல்லூரிக்கு செல்லும் வழியில் குரங்கு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயராம்,மதுரை.
சுகாதார சீர்கேடு
மதுரை தெற்குவெளி வீதி பழைய மகாளிபட்டி ரோட்டில் உள்ள சமுதாய கூடம் அருகில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது மக்கள், மதுரை.
அதிகாரிகள் கவனிப்பார்களா?
மதுரை ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் திறக்கப்பட்ட கல்வெட்டு, சித்திரை திருவிழாவின் போது வெள்ளை அடிக்கப்பட்டதில் கல்வெட்டு சரியாக தெரியவில்லை. இந்த கல்வெட்டை புது வர்ணம் பூசி மதுரையின் ஏ. வி. மேம்பாலத்தின் வரலாறு போற்றப் பட வேண்டும். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி, மதுரை.
சாலையில் செல்லும் கழிவுநீர்
மதுரை பைபாஸ் ரோடு துரைச்சாமி நகர் நுழையும் சாலைகளில் கழிவுநீர் ஆறு போல் செல்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், மதுரை.