தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து மதுரை, தென்காசி, நெல்லை ஆகிய பகுதிகளுக்கு இரவு நேரங்களில் செல்ல போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரங்களில் நீண்டநேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதிகளுக்கு இரவு நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரவேல், ராஜபாளையம்.
நோய் பரவும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் எஸ்.ராமச்சந்திரபுரத்தில் கலைமகள் தெற்கு, மேற்கு தெருக்களில் வாருகால் வசதி இல்லாததால் கழிவுநீரை வெளியேற்ற வழியின்றி மக்கள் தவிக்கின்றனர். இதனால் கழிவுநீரின் மூலம் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எஸ்.ராமச்சந்திரபுரம்.
பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் சில தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஸ்ரீவில்லிபுத்தூா்.
தொல்லை தரும் நாய்கள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கிழவிகுளம் ஊராட்சியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இரவு நேரங்களில் வேலை முடிந்து வரும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் நாய்க்கடியால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
கண்ணன், ராஜபாளையம்.
சுகாதாரக்கேடு
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் எஸ்.ஆர்.தெருவில் குப்பைகள் கொட்டப்படுவதால் இந்தப்பகுதியில் துர்நாற்றமும் சுகாதாரக் கேடும் உண்டாகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவி, அருப்புக்கோட்ைட.