'தினத்தந்தி' செய்தி எதிரொலி: சேரம்பாடி -கோரஞ்சால் இடைேய இடிந்த பாலம் சீரமைப்பு பணி தொடக்கம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் சேரம்பாடி -கோரஞ்சால் இடைேய இடிந்த பாலம் சீரமைப்பு பணி தொடங்கியது.
பந்தலூர்
'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் சேரம்பாடி -கோரஞ்சால் இடைேய இடிந்த பாலம் சீரமைப்பு பணி தொடங்கியது.
பாலம் இடிந்தது
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சாலிருந்து போத்துகொல்லிக்கு செல்லும் சாலை உள்ளது. சாலையின் நடுவே ஆறு ஓடுகிறது. ஆற்றின் நடுவே பெரிய பாலம் கட்டப்பட்டு இருந்தது. பாலம் அருகே சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
அவசர தேவைகளுக்கு சேரம்பாடிக்குதான் செல்ல வேண்டும். இந்தநிலையில் ஆற்றின் நடுவே இருந்த பாலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து பொதுமக்கள் மரப்பாலம் அமைத்து ஆற்றினை கடந்து சென்றனர். மேலும் அவர்கள் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் இதுதொடர்பாக செய்தி தினத்தந்தி நாளிதழில் பிரசுரமாகியது.
கட்டுமான பணிகள் தொடக்கம்
இதையடுத்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவுபடி மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயராமன், கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமாரமங்கலம், பொறியாளர் ஈஸ்வரமூர்த்தி, சேரங்கோடுஊராட்சி துணைதலைவர் சந்திரபோஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.
மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் புதிதாக பாலம் கட்ட ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் உடைந்து கிடந்த கழிவுகளை அகற்றி பணிகள் மும்முரமாக நடைபெற்ற வருகிறது. விரைவில் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.