'தினத்தந்தி' செய்தி எதிரொலி; பர்கூர் ஈரெட்டியில் பாலம் கட்டும் பணி தொடங்கியது
'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் பர்கூர் ஈரெட்டியில் பாலம் கட்டும் பணி தொடங்கியது.
அந்தியூர்
பர்கூர் மலைப்பகுதி ஈரெட்டியில் உள்ள நீரோடையில் மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் மலைக்கிராம மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். எனவே ஈரெட்டியில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்று கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஈரெட்டியில் பாலம் கட்டும் பணி தொடங்கி நடந்தது. ஆனால் திடீரென இந்த பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரெட்டியில் பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.