'தினத்தந்தி' செய்தி எதிரொலிதாளவாடி மலைப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க ஆய்வு பணி தொடக்கம்மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி


தினத்தந்தி செய்தி எதிரொலிதாளவாடி மலைப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க ஆய்வு பணி தொடக்கம்மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் தாளவாடி மலைப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க ஆய்வு பணி நடந்தது

ஈரோடு

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக தாளவாடி மலைப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க ஆய்வு பணி தொடங்கி உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி...

தாளவாடி மலைப்பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. மழைக்காலங்களில் இங்குள்ள 10-க்கும் மேற்பட்ட ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம்.

இதனால் ஆசனூர், அரேபாளையம், சிக்கள்ளி கும்பாரகுண்டி, தொட்டகாஜனூர் ஆகிய பகுதியில் உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து செல்வது தொடர்கதையாகி வருகிறது. இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். எனவே தரைப்பாலங்களை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

ஆய்வு பணி

இந்த நிலையில் இதுபற்றிய செய்தி நேற்றைய 'தினத்தந்தி' யில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.

இதன் எதிரொலியாக நேற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆசனூரை அடுத்த அரேபாளையம் தரைப்பாலத்தின் அருகே உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக நிலத்தின் உறுதி தன்மையை அறிய ஆழ்துளையிட்டு ஆய்வு பணியை மேற்கொண்டனர். இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'தரைப்பாலங்களை உயர்மட்ட பாலமாக அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விட்டது. ஆனால் வனப்பகுதி சாலை என்பதால் பலம் கட்டும் வரை வாகனங்கள் சென்று வர மாற்றுப்பாதை பாலத்தின் அருகே அமைக்க வேண்டும். அதற்கு வனத்துறை அனுமதி அளிக்கவில்லை. இதன்காரணமாக பாலம் கட்டும் பணி கிடப்பில் இருந்ததாகவும்,' தெரிவித்தனர்.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், 'மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு வனத்துறையினரின் அனுமதியை பெற்று உயர்மட்ட பாலம் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


Next Story