திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
திண்டுக்கல்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சோபியா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) காண்டீபன் வரவு-செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் முறையான குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். ஊராட்சிகளில் தற்போது செய்து வரும் அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story