தீபாய்ந்தாள் அம்மன் கோவில் குடமுழுக்கு விழா


தீபாய்ந்தாள் அம்மன் கோவில் குடமுழுக்கு விழா
x

தீபாய்ந்தாள் அம்மன் கோவில் குடமுழுக்கு விழா

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் திருவிழந்தூர் தீபாய்ந்தாள் அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 1-ந்தேதி கணபதி பூஜை செய்யப்பட்டது. பின்னர் யாகசாலையில் புனிதநீர் கலசங்களை வைத்து வேதவிற்பன்னர்கள் முதல் கால யாகசாலை பூஜையை தொடங்கினர். நேற்றுமுன்தினம் 2-ம், 3-ம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்தது. நேற்று 4-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மேளதாளம், வாணவேடிக்கைகள் முழங்க புனிதநீர் கலசங்களை வேதவிற்பன்னர்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்த பின்னர் கோபுரங்களை சென்றடைந்தனர். இதையடுத்து மந்திரங்கள் ஓதி, புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story