கருவி மூலம் நேரடி நெல் விதைப்பு
சங்கராபுரம் அருகே கருவி மூலம் நேரடி நெல் விதைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் நெல்விதை கருவி மூலம் நேரடி நெல் விதைப்பு ஒரு விவசாயி வயலில் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தலைமையில் நடைபெற்றது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா, உதவி தொழில்நுட்ப மேலாளர் மேரிஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொன்னி நெல் நேரடி நெல் விதைக்கும் கருவி மூலம் நடப்பட்டதால், நாற்றங்கால் செலவு குறைந்துள்ளதாகவும், வேலையாட்கள் செலவும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வேளாண்மை அதிகாரி விளக்கம் அளித்தார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story