மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்


மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:45 AM IST (Updated: 17 Nov 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவாரூர்

குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம், அன்னவாசல், பெருமங்கலம் ஆகிய கிராமங்களுக்கான மக்கள் நேர்காணல் முகாம் சேங்காலிபுரத்தில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், உதவி கலெக்டர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடவாசல் தாசில்தார் குருநாதன் வரவேற்றார். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 210 மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதில் வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை, வேளாண் இடுபொருட்கள், தையல் எந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முகாமில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் பொன்னியின் செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரபாவதி, ஊராட்சி தலைவர்கள் கண்ணன், சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல துணை தாசில்தார் சிவராமன் நன்றி கூறினார்.


Next Story