சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் ஆய்வு


சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் ஆய்வு
x

ஆம்பூர் பகுதியில் மாணவர் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் ஆய்வுசெய்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் பகுதியில் மாணவர் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் ஆய்வுசெய்தார்.

மாணவர் விடுதியில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சோலூர் பகுதியில் உள்ள அரசு சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவர் விடுதியை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள சமையலறை, மாணவர்கள் தங்கும் அறை, விடுதி காப்பாளர் அறையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், இருப்பில் உள்ள உணவுப் பொருட்கள், கழிவறைகள் ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டிருந்த உணவை ஆய்வு செய்து, உணவு பொருட்கள் வைக்கப்படும் அறையில் இருப்பில் உள்ள உணவு பொருட்களின் நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்து சரியான நேரத்திற்கு வழங்கப்பட வேண்டும் என விடுதி காப்பாளருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் விடுதி வளாகத்தை பார்வையிட்டு தூய்மையாகவும், மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும் விடுதி காப்பாளருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

பயனாளிகளுக்கு அறிவுரை

இதைத் தொடர்ந்து ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு ஊராட்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் காய் கடை வைப்பதற்காக ரூ.25 ஆயிரம் கடனுதவி பெற்ற பயனாளி அஸ்ரப்அலி, பிரியாணி கடை வைப்பதற்காக ரூ.50 ஆயிரம் கடனுதவி பெற்ற பயனாளி பயாஸ்அகமத் ஆகியோரை சந்தித்து கடனுதவி பயனுள்ளதா என்பது குறித்தும், மாத தவணையை தவறாமல் கட்டி, மேலும் கடனுதவிகள் பெற்று கடையை மேம்படுத்தி வளர்ச்சி அடைய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமரகுஷ்வாஹா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பாபு மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story