டைரக்டர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அழைக்காதது வேதனை அளிக்கிறது -பெரியப்பா பேட்டி


டைரக்டர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அழைக்காதது வேதனை அளிக்கிறது -பெரியப்பா பேட்டி
x

பெரியவர்களை கலந்தாலோசிக்கவில்லை: டைரக்டர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அழைக்காதது வேதனை அளிக்கிறது பெரியப்பா பேட்டி.

திருச்சி,

நடிகை நயன்தாரா-டைரக்டர் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்க தன்னை அழைக்கவில்லை என திருச்சி மாவட்டம் லால்குடியில் வசிக்கும் அவரது பெரியப்பா மாணிக்கம் (வயது 78) வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எனது பெற்றோருக்கு 8 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள். நான் தான் குடும்பத்தில் மூத்தவன். விக்னேஷ் சிவனின் தந்தை, எனக்கு அடுத்து பிறந்தவர். வேலை நிமித்தமாக பிரிந்து வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறோம். எனது மனைவி பிரேமா. குழந்தை பாக்கியம் இல்லாத நாங்கள் விக்னேஷ் சிவனையும், அவரது சகோதரி ஐஸ்வர்யாவையும் எங்களது சொந்த குழந்தையாகவே பாவித்தோம். எனது தம்பி இறந்த பிறகு விக்னேஷ் சிவன் உள்ளிட்ட யாரிடமும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது.

விக்னேஷ் சிவன் பெரியவர்களை கலந்து ஆலோசித்து இந்த திருமண ஏற்பாடுகளை செய்யாதது எனக்கும், எனது மனைவிக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. மேலும் எங்களை திருமணத்திற்கும் அழைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story