கூத்தம்பாக்கம் பாலாற்றில் மண் சாலை அமைப்பு


கூத்தம்பாக்கம் பாலாற்றில் மண் சாலை அமைப்பு
x

குடியாத்தம் செல்ல கூத்தம்பாக்கம் பாலாற்றில் மண் சாலை அமைக்கப்பட்டது.

வேலூர்

பாலாற்றில் 2 ஆண்டுகளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது வெள்ளம் வற்றி ஓடையாக செல்கின்றது. இருந்தாலும் பொதுமக்கள் பாலாற்றைக் கடந்து குடியாத்தம் செல்ல முடியாமல் மாதனூர் மற்றும் பள்ளிகொண்டா வழியாக சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் மாதனூர் பாலமும் சீரமைக்கப்படுவதால் அங்கும் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் குடியாத்தம் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

5 ஊராட்சிகளை குடியாத்தம் தாலுகாவுக்கு மாற்றியதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் கூத்தம்பாக்கம் பாலாற்றில் நேற்று 100 நாள் திட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மண் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மண், செம்மண் உள்ளிட்டவைகளை கொட்டி சாலையாக மாற்றினர். இதனால் நாளை முதல் இந்த மண் சாலை பயன்பாட்டுக்கு வரும் என அலங்காநல்லூர்ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ரஞ்சித் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தனர்.


Next Story