மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்: தொழில்கடன், உதவித்தொகை கேட்டு 127 பேர் மனு
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழில் கடன், உதவித்தொகை கேட்டு 127 பேர் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ராஜசேகர், முன்னோடி வங்கி மண்டல மேலாளர் அருணாசலம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அப்போது தொழில் கடன், உதவித்தொகை, 3 சக்கர வாகனம் உள்ளிட்டவை கேட்டு 127 மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story