மாற்றுத்திறனாளிகள் தின விளையாட்டு போட்டிகள்
வேட்டவலத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விளையாட்டு போட்டிகள் நடந்தன.
வேட்டவலத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விளையாட்டு போட்டிகள் நடந்தன.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வேட்டவலம் (தெற்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி வளாகத்தில் இயங்கு வரும் பகல் நேர பராமரிப்பு மையத்தில் ஒருங்கிணைந்த மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. உள்ளடங்கிய கல்வித்திட்டதின் கீழ் நடந்த போட்டிகளுக்கு தலைமையாசிரியை சாந்தி தலைமை தாங்கினார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை அனுராதா முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஏழுமலை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஓட்டப் பந்தயம், உருளைக்கிழங்கு சேகரித்தல், பலூன் உடைத்தல், 'லெமன் அண்ட் ஸ்பூன்', இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 30 பேர் மற்றும் பள்ளி மாணவர்கள் 30 என மொத்தம் 60 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வெங்கடாசலம் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினார். இதில் சிறப்பு பயிற்றுநர்கள் மணி, சரண்யா, அன்பரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் சிறப்பு பயிற்றுனர் அம்பிகா நன்றி கூறினார்.