மனைவி, மகள்களை துன்புறுத்திய மாற்றுத்திறனாளி கைது


மனைவி, மகள்களை துன்புறுத்திய மாற்றுத்திறனாளி கைது
x
தினத்தந்தி 10 Aug 2023 8:00 PM GMT (Updated: 10 Aug 2023 8:01 PM GMT)

மனைவி, மகள்களை துன்புறுத்திய மாற்றுத்திறனாளியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

கொடைரோடு அருகேயுள்ள குல்லலக்குண்டுவைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 30). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், 4 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். குழந்தைகளை சரியாக பாரமரிப்பு செய்யாமல் துன்புறுத்துவதாக அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் அரவிந்த், பிரியா கொடுத்த தகவலின்பேரில், திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார், சமூகநலத்துறை அலுவலர் புஷ்பகலா, நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி, அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், குல்லலக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் முத்து சரவணன், மாற்றுத்தினாளி சங்க தலைவர் மோகன் ராஜ் ஆகியோர் நாகராஜ் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது நாகராஜிடம் பல மணி நேரம் பேசி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

ஆனால் அவர் அதை கேட்காமல், அலுவலர்களை அவதூறான வார்தைகள் பேசினார். மேலும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் நாகராஜ் தனது மனைவி தேவி, 2 குழந்தைகளுடன் வீட்டிற்குள் அழைத்து சென்று கதவை பூட்டி கொண்டார். பின்பு மனைவி, குழந்தைகள் மீது அவர் மண்எண்ணெயை ஊற்றி பின்னர் வெளியே வந்து அதிகாரிகளை மிரட்டினார். இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். நாகராஜின் மனைவி மற்றும் 2 குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.


Next Story