கீரப்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டம்
கீரப்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
கீரப்பாளையம்,
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன். தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி தேவதாஸ் படை யாண்டவர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டார்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முழுமையாக வேலை அளிக்க வேண்டும். 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கோரிக்கையாக தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் வரவேற்றார்.
கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், அலுவலக ஊழியர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டார்கள். அலுவலக பணியாளர் எஸ்தர்டயானா நன்றி கூறினார்.