மாற்றுத்திறனாளிகள் குறை கேட்பு முகாம்


மாற்றுத்திறனாளிகள் குறை கேட்பு முகாம்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் மாற்றுத்திறனாளிகள் குறை கேட்பு முகாம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்க்கிழமை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்க்கிழமை மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முன்னிலையிலும் குறை கேட்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. எனவே ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றியங்களில் நடத்தப்படும் குறை கேட்பு முகாமிலும், மாவட்ட அளவில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முன்னிலையில் நடத்தப்படும் குறை கேட்பு முகாமிலும் ஊரகப் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story