மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்


மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 23 July 2023 1:42 AM IST (Updated: 23 July 2023 4:44 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமரூல்ஜமான் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் கடை பொருட்கள் நேரடியாக வீட்டிற்கு கொண்டு வந்து தர உத்தரவிட வேண்டும். அனைத்து ரெயில்களின் இருபுறங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் தவறாமல் இணைக்கப்பட வேண்டும்.

மாதந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்படும் முகாம்களை கும்பகோணம் பழைய நகராட்சி கட்டிடத்தில் நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்கடன் முகாம் கும்பகோணம் கோட்ட அளவில் நடத்த வேண்டும் என்றனர். பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட 45 மனுக்கள் அந்தந்த துறைக்கு அனுப்பி வைத்து தீர்வு காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.


Next Story