மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி


மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி
x

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி நடந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் 2022-23-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகள் அனைத்து வயது பிரிவினருக்கும் நடைபெற்றது. இதில் கை கால் ஊனமுற்றோர் பிரிவினருக்கு 50 மீட்டர் ஓட்டம் மற்றும் இறகுப்பந்து விளையாட்டு, காது கேளாதோருக்கு 100மீ ஓட்டம் மற்றும் கபடி விளையாட்டு, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு 100மீ ஓட்டம் மற்றும் எறிபந்து விளையாட்டு, பார்வைத்திறன் குறைவற்றவர்களுக்கு 100மீ ஓட்டம் மற்றும் சிறப்பு கையூந்து பந்து விளையாட்டுகளும் நடத்தப்பட்டது.

நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். மாவட்டத்தில் முதலிடம் பெறுபவர்கள் மாநில போட்டியில் கலந்துகொள்ள தகுதியானவர்கள் ஆவர்.

இந்த தகவலை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.


Next Story