மாற்றுத்திறனாளி வாலிபர் பலி
முத்துப்பேட்டை அருகே ஸ்கூட்டரில் இருந்த தவறி விழுந்த மாற்றுத்திறனாளி வாலிபர் உயிரிழந்தார்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அருகே ஸ்கூட்டரில் இருந்த தவறி விழுந்த மாற்றுத்திறனாளி வாலிபர் உயிரிழந்தார்.
தவறி விழுந்தார்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கடையில் வேதாரண்யம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை கணேஷ் மூர்த்தி (வயது44) பணியாற்றி வந்தார். மாற்றுத்திறனாளியான இவர் முத்துப்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வந்தாா். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான ஸ்கூட்டரில் நண்பருடன் முத்துப்பேட்டையிலிருந்து உதயமார்த்தாண்டபுரத்துக்கு கணேஷ்மூர்த்தி சென்றுக்கொண்டிருந்தார்.
தனியார் பள்ளி எதிரே சாலையில் சென்ற போது சாலையில் வேகத்தடை இருந்ததை கவனிக்காததால் இவர் சென்ற ஸ்கூட்டர் தூக்கி வீசப்பட்டு விபத்து ஏற்பட்டது. இதில் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற கணேஷ் மூர்த்தி படுகாயமடைந்தார்.
பரிதாப சாவு
இதன்பின் ஆஸ்பத்திரிக்கு செல்லாத அவர் தனது ஸ்கூட்டரில் மீண்டும் தான் தங்கியிருந்த இடத்துக்கு வந்து படுத்து தூங்கி விட்டார்.
நேற்று காலை அவரது நண்பர்கள் எழுப்பி பார்த்தபோது கணேஷ்மூர்த்தி இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரது உடலை பார்த்தபோது தலையில் பின் பகுதியில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ் மூர்த்தியின் உடலை திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.