பேரிடர் எச்சரிக்கை செயலி-வலைத்தளம் உருவாக்கம்


பேரிடர் எச்சரிக்கை செயலி-வலைத்தளம் உருவாக்கம்
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பேரிடர் எச்சரிக்கை செயலி-வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதால் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பேரிடர் அபாய குறைப்பிற்கான தேசிய பேரிடர் எச்சரிக்கை தளம் மற்றும் ஒருங்கிணைந்த எச்சரிக்கை அமைப்பின் கைபேசி செயலி ஆகியவற்றை உருவாக்கி உள்ளது. இந்த தளம் மற்றும் கைப்பேசி செயலி மூலம் பொதுமக்கள் பேரிடர் பாதிக்கும் பகுதி, பேரிடரின் தீவிரம், மீட்பு நடவடிக்கை, அவசர கட்டுப்பாட்டு அறை எண்கள், பேரிடர் காலங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

எனவே பொதுமக்கள் வலைதளப் பயன்பாட்டாளர்கள் https://sachet.ndma.gov.in என்ற இணையதளத்திலும், ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் bit.ly/3Fb3Osz, ஐபோன் பயன்பாட்டாளர்கள் apple.co/3ywcV3f என்ற வலைதள முகவரியைப் பயன்படுத்தியும் பேரிடர் எச்சரிக்கை செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த தகவலை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.


Related Tags :
Next Story