பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி


பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
x

பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

திருவாரூர்

வலங்கைமான்

வலங்கைமானை அடுத்த ஆலங்குடியில் பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் உதவி கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். தேசிய பேரிடர் மீட்பு படை மேற்பார்வையாளர் உமா மகேஸ்வரராவ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை எவ்வாறு மீட்பது? என்பது குறித்த முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் மீட்பு பணிகளை வலங்கைமான் தீயணைப்பு நிலைய வீரர்கள் செயல்முறை மூலம் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை மாவட்ட அலுவலர் விஜயன், வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன், ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ், வலங்கைமான் ஒன்றிய ஆணையர் கலைராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்ட வருவாய்த்துறை, சுகாதார துறை அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் பல்நோக்கு பேரிடர் மைய வளாகத்தில் பேரிடர் மற்றும் வெள்ள தடுப்பு மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது? என விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் திருத்துறைப்பூண்டி சமூக பாதுகாப்பு துறை தாசில்தார் சிவக்குமார், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், வருவாய் அலுவலர்கள் மதியழகன், தினேஷ்குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அஜிஸ், வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், உணவு கட்டுப்பாடு துறை அலுவலர் முதலியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story