பேரிடர் மேலாண்மை செயல்விளக்கம்


பேரிடர் மேலாண்மை செயல்விளக்கம்
x

அரசு பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை செயல்விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசி

தென்காசி வருவாய் துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் தென்காசி ஐ.சி.ஐ. அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பேரிடர் மேலாண்மை செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி தாசில்தார் (பொறுப்பு) பட்டமுத்து, தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். மண்டல துணை தாசில்தார் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் காலத்தில் செயல்பட வேண்டிய முறைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து செயல்விளக்கம் காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு படை சிறப்பு போக்குவரத்து நிலைய அலுவலர் ஜெய பிரகாஷ் பாபு, தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story