பேரிடர் மேலாண்மை பயிற்சி


பேரிடர் மேலாண்மை பயிற்சி
x

புத்தூர் ஊராட்சியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு ஒன்றியம் புத்தூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறு வட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நத்தபள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திநடராஜசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் தலைஞாயிறு தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story