பேரிடர் மேலாண்மை பயிற்சி
போலகம், எரவாஞ்சேரி ஊராட்சிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது. இதற்கு போலகம் ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார். திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் லதாஅன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருமருகல் தீயணைப்பு நிலைய அலுவலர் திலக்பாபு மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் ஊராட்சி செயலாளர் சாமிநாதன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல, எரவாஞ்சேரி ஊராட்சி துறையூரில் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம் தலைமையிலும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் முன்னிலையிலும், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.