பேரிடர் மேலாண்மை பயிற்சி


பேரிடர் மேலாண்மை பயிற்சி
x

கொள்ளிடம் அருகே பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. சீர்காழி தீயணைப்பு துறை அலுவலர் ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் கிராமங்களில் முன்பே தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் நிலை பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஜெயபிரகாஷ் கலந்துகொண்டு பேரிடர் மற்றும் இயற்கை சீற்றம் ஏற்படும் காலத்தில் மக்களை பாதுகாக்கும் முறை, தீ விபத்தில் சிக்கிய ஒருவரை எப்படி பாதுகாப்பாக மீட்பது? வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும்போது எப்படி முன்எச்சரிக்கையாக தங்களை காப்பாற்றிக் கொள்வது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் .வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், ஊராட்சி தலைவர் கனகராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவராமன், சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story