பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்


பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்
x

பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

நாகப்பட்டினம்

வாய்மேடு:

நாகை மாவட்டம் வாய்மேடு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் பேரிடர் மாவட்ட பயிற்றுனர் அன்னபூரணி, வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) கண்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ரமேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் அறிவழகன் நன்றி கூறினார்.


Next Story