பேரிடர் கால மீட்பு ஒத்திகை


பேரிடர் கால மீட்பு ஒத்திகை
x

குத்தாலம் அருகே பேரிடர் கால மீட்பு ஒத்திகை நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம் அருகே தொழுதாலங்குடி கிராமத்தில் குத்தாலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் மழை-வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை எவ்வாறு மீட்பது?, நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பன உள்ளிட்டவை குறித்து ஒத்திகை மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீரில் தத்தளித்த இளைஞரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு அவருக்கு முதலுதவி கொடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது போல் தத்ரூபமாக ஒத்திகை செய்து காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் குத்தாலம் தாசில்தார் கோமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, வட்டார மருத்துவ அலுவலர் கோபி, மண்டல துணை தாசில்தார் சுந்தர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வீரமணி, குத்தாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், வருவாய் ஆய்வாளர் பரமானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story