பேரிடர் கால ஒத்திகை பயிற்சி
பேரிடர் கால ஒத்திகை பயிற்சி
திருவாரூர்
கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் (பொறுப்பு) தலைமையில் தென்மேற்கு பருவமழை, பேரிடர் கால ஒத்திகை பயிற்சியை கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாசல் குளத்தில் செய்து காட்டினர். அப்போது மழைக்காலங்களில் பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது, தற்காப்பு சாதனங்களை கொண்டு காப்பாற்றி கொள்வது, நீர் நிலைகளில் இருந்து காப்பாற்றி கொள்வது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூத்தாநல்லூர் தாசில்தார் குருமூர்த்தி மற்றும் அரசு கலைக்கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒத்திகை பயிற்சியை பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story