மாணவர்களுக்கு கல்வி தொகை வழங்கல்
கோவில்பட்டியில் விஸ்வகர்ம நகை தொழிலாளர் சங்கம் சார்பில்மாணவர்களுக்கு கல்வி தொகை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி மந்திரத் தோப்பு ரோட்டிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கத்தின் சார்பாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகள் 30 பேருக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் முருகேசன் ஆச்சாரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஸ்வர்கம மகாஜன சங்கத்தலைவர் பாலமுருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க துணைத்தலைவர் மாரியப்பன், செயலாளர் முருகானந்தம், துணைச்செயலாளர் அருணாசலம், பொருளாளர் மாரியப்பன் மற்றும் விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்க நிர்வாக உறுப்பினர்கள், பள்ளி மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story