23,578 பேருக்கு நகை கடன் திட்டத்தில் தள்ளுபடி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23,578 பேருக்கு நகை கடன் திட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23,578 பேருக்கு நகை கடன் திட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில், 12 வங்கி கிளைகள் உள்ளன. தமிழக அரசு அறிவித்த 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் இந்த கிளைகளில் 2,037 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 59 லட்சம் நகைக்கடனும், 4 நகர கூட்டுறவு வங்கிகளில் 4,974 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 70 ஆயிரம் நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 11 ஆயிரத்து 463 பயனாளிகளுக்கு ரூ.35 கோடியே 13 லட்சம் நகைக்கடனும், 9 நகர கூட்டுறவு சங்கங்களில் 4,201 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 23 லட்சம் கடனும் 2 கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 55 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் சார்பில் 848 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 51 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்தம் 23 ஆயிரத்து 578 பயனாளிகளுக்கு 5 பவுன் நகை கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் ரூ.76 கோடியே 67 லட்சம் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.