பழங்கால செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு
பழங்கால செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது.
தஞ்சாவூர்
அய்யம்பேட்டை அருகே உள்ள நல்லிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது பித்தளை பெட்டி ஒன்று கிடைத்தது. அதை திறந்து பார்த்தபோது செப்பு நாணயங்கள் மற்றும் ஒரு பைசா நாணயங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பழங்கால நாணயங்கள் இருந்தன. இதையடுத்து அவர் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் தஞ்சை தாசில்தார் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர் தினகரன், அய்யம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து பழங்கால நாணயங்கள் அடங்கிய பெட்டியை வருவாய்த்துறையினர் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக தஞ்சைக்கு எடுத்து சென்றனர்.
Related Tags :
Next Story