புடைப்பு சிற்பம் கண்டெடுப்பு


புடைப்பு சிற்பம் கண்டெடுப்பு
x

காட்பாடி அருகே புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

வேலூர்

காட்பாடி அருகே உள்ள டி.கே.புரம் கிராமத்தில் கல்லில் செதுக்கப்பட்ட நிலையில் புடைப்பு சிற்பம் ஒன்று இருப்பதாக வேலூரை சேர்ந்த நாணய சேகரிப்பாளர் தமிழ்வாணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்வையிட்டார். அப்போது அந்த சிற்பம் 8-ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் கூறுகையில், அய்யனார் சிலை பல இடங்களில் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் இந்த சிலை மிகவும் விசேஷமானது. கையில் செங்கோல் (தண்டலம்) ஏந்தி உள்ளார். இந்த பகுதியின் பெயர் தண்டலகிருஷ்ணாபுரம் என்பதால் சிலைக்கும், கிராமத்துக்கும் தொடர்பு இருக்கலாம். சில வரலாற்று ஆய்வாளர்களிடம் இதை காண்பித்து கேட்டபோது பிற்கால பல்லவர்கள் அல்லது சோழர்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இதை முழுமையாக ஆய்வு செய்தால் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெறும் என்றார்.


Next Story