திருக்கோவிலூர் அருகே பழமை வாய்ந்த மாதேஸ்வரி கற்சிற்பம் கண்டுபிடிப்பு


திருக்கோவிலூர் அருகே    பழமை வாய்ந்த மாதேஸ்வரி கற்சிற்பம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:45 PM GMT)

திருக்கோவிலூர் அருகே பழமை வாய்ந்த மாதேஸ்வரி கற்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் பகுதியில் கபிலர் தொன்மை ஆய்வு மைய தலைவர் சிங்கார உதியன் தலைமையிலான குழுவினர் கோவில்கள், வனப்பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்தப்பேட்டையில் உள்ள கலை, அறிவியல் கல்லூரி அருகே கல்வெட்டால் ஆன பழமை வாய்ந்த மாதேஸ்வரி கற்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

இ்ந்த சிற்பத்தை கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ரஷீத்கான், பண்ருட்டி இமான், அன்பழகன் மற்றும் முருகன், ராஜமுருகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறுகையில், இந்த சிலை 9, 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தனி பலகைக்கல்லில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைப்பகுதி கரண்டமகுடம் அணிவித்தும், கழுத்தில் ஆபரணங்கள் அணிவிக்க நிலையில் உள்ளன.

அமர்ந்த நிலையில் காணப்படும் இச்சிற்பத்தின் மேலிரு கைகளில் உடுக்கை, மற்றும் அக்க மாலையும், கீழ் இரு கரங்களில் சூலமும், குங்கும சிமிழும் கொண்டு காட்சியளிக்கிறது. இப்பகுதியை ஆய்வு செய்தால் மேலும் பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கும் என்றனர்.


Next Story